24 664697b18b78f
இலங்கைசெய்திகள்

யாழில் தவறான முடிவெடுத்து முதியவர் உயிர்மாய்ப்பு

Share

யாழில் தவறான முடிவெடுத்து முதியவர் உயிர்மாய்ப்பு

யாழில்(Jaffna) முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை தியாகராஜா (வயது 76) என்ற முதியவரே நேற்று(16.05.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவரின் மனைவி உயிரிழந்துள்ளார். அவரது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில் குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மன விரக்தியடைந்த அவர் நேற்று அவரது வீட்டில் உள்ள கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்தாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர் உயிரிழக்கும் காட்சி அங்கிருந்த சிசிரீவி கருவியில் பதிவாகியுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதோடு உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...