Sequence 02.00 01 41 12.Still192 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

Share

யாழில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

யாழ்.(Jaffna) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது யாழ். மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் (13.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்ட வீடானது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் கூடமாக செயற்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதுடன் வீடானது சீல் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வாளர்களை வரவளைத்து பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கைது நடவடிக்கையின் போது பிரதான சந்தேக நபர் தப்பியுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவரும் யாழ். பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...