அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டல் வழங்க முயற்சி
அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டல் வழங்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மதுபான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பணம் என்பனவற்றை வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சியின் பக்கம் இணைத்துக் கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் தமது அணியிலிருந்து எவரும் பணத்திற்கோ மதுபான அனுமதிப் பத்திரத்திற்கோ விலை போக மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொனராகல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது சஜித் பிரேமதாச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
Comments are closed.