கொழும்பில் இளம் பெண்ணின் மோசமான செயல்
கொழும்பில் தனியார் நிறுவனமொன்றின் சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தருடன் தகாத உறவு ஒன்றை ஏற்படுத்தி அவரது வீட்டில் உள்ள பொருட்களை திருடிய இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பின்வத்தை பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய திருமணமான குறித்த நிர்வாக உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் பின்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இந்த நபரின் வீட்டில் இருந்து சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் மற்றுமொரு இளைஞருடன் இணைந்து நிர்வாக அதிகாரியின் வீட்டிற்கு ஜன்னல் வழியாக நுழைந்து பொருட்களை திருடியுள்ளார்.
Comments are closed.