24 663c6c2f02c07
இலங்கைசெய்திகள்

யாழில் திடீரென வாகனங்களை மறித்து சோதனை

Share

யாழில் திடீரென வாகனங்களை மறித்து சோதனை

நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக ‘யுக்திய’ சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (09.5.2024) காலை யாழ்ப்பாணம் (Jaffna) – சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.

காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் (Deshabandu Tennakoon) ஆலோசனைக்கு அமைவாக போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ‘யுக்திய’ சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், யாழ். சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பிரதேசத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஏ 9 மற்றும் ஏ 32 வீதிகளூடாக பயணித்த வாகனங்களை மறித்து சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
நகைகளை வைத்து சூதாடிய குருக்கள்
இலங்கை

ஆலய நகைகளை திருடி சூதாடிய குருக்கள்!

கொழும்பு – கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய...

Court order 3
இலங்கை

புலிகளின் முகாம் தொடர்பில் வதந்தி – சந்தேக நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

சமூக வலைத்தளங்களில் கிளிநொச்சி, பளை வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலித் தகவலை வௌியிட்ட...

Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....