24 663593df9cec5
இலங்கைசெய்திகள்

லண்டன் சென்ற விமானத்தில் குழப்பம் – மன்னிப்புக் கோரிய ஸ்ரீலங்கன் விமான சேவை

Share

லண்டன் சென்ற விமானத்தில் குழப்பம் – மன்னிப்புக் கோரிய ஸ்ரீலங்கன் விமான சேவை

லண்டனுக்கான UL 503 விமானம் ஒஸ்ரியாவில் உள்ள வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை மன்னிப்பு கோரியுள்ளது.

மருத்துவ அவசரம் காரணமாக இந்த விமானம் இவ்வாறு தரையிறங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை வெளியிட்ட அறிக்கையில், மே மாதம் முதலாம் திகதி 272 பயணிகளுடன் லண்டனுக்குப் புறப்பட்ட UL 503 விமானம், மருத்துவ அவசரநிலை காரணமாக வியன்னாவில் தரையிறங்கியதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

அதைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. லண்டன் நேரப்படி இரவு 10 மணி அளவில் ஹீத்ரோ விமான நிலையத்தை அடைய முடியாமல் போய்விடும் என்பதால் பயணம் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக UL 503 விமானம் மறுநாள் புறப்படுவதற்கு மாற்றப்பட்டது. ஐரோப்பாவிற்கு விசா பெற்ற அனைத்து பயணிகளுக்கும் வியன்னாவில் தங்குமிடம் வழங்கப்பட்டது. விமானம் அடுத்த நாள் தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது.

லண்டன் நேரப்படி இரவு 9.30 மணிக்கு லண்டனை வந்தடைந்தது. இந்த தாமதத்தின் காரணமாக லண்டனில் இருந்து கொழும்புக்கு செல்லும் UL 504 விமானத்தை இரத்து செய்ய வேண்டியிருந்தது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது மற்றும் ஏற்கனவே வந்தவர்களுக்கு செய்தவர்களுக்கு ஹோட்டல் தங்குமிட வசதி வழங்கப்பட்டது.

எங்கள் பயணிகளுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மிக முக்கியமானது.

மேலும் அவர்களின் புரிதல் மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்” என ஸ்ரீலங்கன் விமான சேவை மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...