24 662f5875c8e00
இலங்கைசெய்திகள்

பாரிய அளவில் அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

Share

பாரிய அளவில் அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

2024 ஏப்ரல் முதல் 25 நாட்களில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், கடந்த 25 நாட்களுக்குள் 121,595 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2024ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 757,379ஆக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் முதல் 25 நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் 18 வீத இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் எண்ணிக்கை 21,324 ஆகும்.

இது தவிர, ரஷ்யாவிலிருந்து 12,807 சுற்றுலாப்பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 11,626 சுற்றுலாப்பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 8,565 சுற்றுலாப்பயணிகளும் இந்நாட்டுக்கு வந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...