24 662b7f8c2f0bf
இலங்கைசெய்திகள்

சஹ்ரானின் பின்னணியில் இருந்தவருக்கு கோட்டாபய வழங்கிய உயர் பதவி!

Share

சஹ்ரானின் பின்னணியில் இருந்தவருக்கு கோட்டாபய வழங்கிய உயர் பதவி!

தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலேதான்(Suresh Sale), உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியாக கூறப்படும் சஹ்ரான் ஹாசிமை வளர்த்துவிட்டவர் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுரேஸ் சாலே தற்போது தனக்கும் இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது.

நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார்.

சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன். அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும்.

சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...