இலங்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த சம்பளம் கிடைக்குமா…!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த சம்பளம் கிடைக்குமா…!
மலையக (Upcountry) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலான முடிவுகள் சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்படவுள்ளன.
இதற்கான சம்பள நிர்ணய சபையானது, இன்று (24.04.2024) கூடவுள்ளது.
இதற்கமைய, மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை நாள் சம்பளமாக 1700 ரூபா வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடியபோது, முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தோட்ட சேவையாளர் சங்கம் இரண்டும் அதில் பங்கேற்கவில்லை.
இந்நிலையிலேயே,14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு சம்பள நிர்ணய சபை இன்று மீண்டும் கூடுகின்றது.