24 661deaca7be50
இலங்கைசெய்திகள்

வாகனங்களை இறக்குமதி : பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Share

வாகனங்களை இறக்குமதி : பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் பொருளாதாரம் இன்னும் நல்ல நிலையில் இல்லை என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் அந்நிய செலாவணியினால் பொருளாதாரம் குறிப்பிட்ட மட்டத்தில் உள்ளதாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் பிரியந்த துனுசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ரூபாயின் பெறுமதி ஓரளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. எனினும் இதனை கொண்டு உடனடியாக வாகன இறக்குமதி செய்ய செல்வது தவறான செயலாகும்.

அரசாங்கத்திற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்யும் போதும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கொள்வனவு செய்ய வேண்டும்.

நாட்டிற்கு தேவையான வாகன இறக்குமதிகள் செய்தால் மீண்டும் நெருக்கடியான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் படிப்படியாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று அறிவித்தார்.

இது தொடர்பில் ஏற்கனவே விசேட குழுவொன்று தேவையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
539661 trisha mks
இந்தியாசெய்திகள்

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...

images 6
இலங்கைசெய்திகள்

ஷெங்கன் விசா: ஜேர்மன் தூதரகம் புதிய அறிவிப்பு – நியமனங்களை VFS குளோபல் மூலம் நிகழ்நிலையில் பதிவு செய்ய உத்தரவு!

இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகம், ஷெங்கன் விசா விண்ணப்பங்களுக்கான அனைத்து நியமனங்களையும் (Appointments) நேற்று (நவ 4)...

24 66af4e7e9035f
செய்திகள்இலங்கை

அவுஸ்திரேலியாவில் புரட்சிகரமான ‘சோலார் ஷேரர்’ திட்டம்: வீடுகளுக்கு தினமும் 3 மணி நேரம் வரை இலவச மின்சாரம்!

அவுஸ்திரேலிய அரசாங்கம், வீடுகளுக்குத் தினமும் 3 மணி நேரம் வரை இலவச மின்சாரம் வழங்கும் ‘சோலார்...

34d96040 2a8a 11f0 b26b ab62c890638b.png
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் காற்றாலைத் திட்டங்கள்: மக்களின் விருப்பமின்றி மேலும் திட்டங்கள் இல்லை – அமைச்சரவை அங்கீகாரம்!

மன்னார் தீவு மக்களின் விருப்பம் இல்லாமல், தொடர்ந்து அங்கு புதிய காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களை முன்னெடுக்காமல்...