24 6617a6673a3c2
இலங்கைசெய்திகள்

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்பு!

Share

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்பு!

கடத்தப்பட்டு மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் அடிமைகள் முகாமில் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 இலங்கையர்களில் 8 பேரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 6 ஆண்களும் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இது குறித்து மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார (Janaka Bandara) தெரிவிக்கையில்,

கடத்தப்பட்டடு மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களில் 8 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 8 பேரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கையர்களைப் பாதுகாப்பாக நாட்டுக்கு அனுப்ப இலங்கைத் தூதரகம், வெளியுறவுத் துறை அமைச்சு மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

மனித கடத்தலினால் பாதிக்கப்பட்டு மியன்மாரில் சிக்கியுள்ள ஏனைய இலங்கையர்களை நாட்டுக்கு மீண்டும் அனுப்ப மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

இலங்கையர்கள் அடங்கிய குழுவினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வேலைவாய்ப்புக்காக தாய்லாந்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் மியன்மாரின் பயங்கரவாத குழுவால் கடத்தப்பட்டு சட்டவிரோத சைபர் அடிமைகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கரவாதக் குழு, கடத்தப்பட்ட இலங்கையர்களை விடுவிக்க 8,000 அமெரிக்க டொலர்களை கப்பமாக கோரியிருந்த நிலையில் இலங்கைத் தூதரகத்தின் உதவியுடன் கடந்த ஆண்டு அவர்களில் சுமார் 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டனர்.

எஞ்சிய 56 இலங்கையர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் தற்போது சுமார் 8 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...