இலங்கை
அஸ்வெசும தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சின் அறிவிப்பு
அஸ்வெசும தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சின் அறிவிப்பு
மேலும் 182,140 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அஸ்வெசும நிவாரணம் பெறத் தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்ததில் இந்த குடும்பங்கள் நிவாரணம் பெறத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்களுக்கான நிலுவைத் தொகைகள் உட்பட அனைத்து கொடுப்பனவுகளும் ஏப்ரல் 18ஆம் திகதிக்குள் கணக்கிடப்படும். தற்போது 1,854,000 பேர் நன்மைகளைப் பெற்று வருகின்றனர்.
அதற்காக அரசாங்கம் 58.5 பில்லியன் ரூபாவைச் செலவிடுகிறது. இதேவேளை, நன்மைகளைப் பெறுவதற்கான சகல தகுதிகளையும் பூர்த்தி செய்த சுமார் 200,000 குடும்பங்கள் தமது வங்கிக் கணக்குகளைத் திறந்து அது தொடர்பான தகவல்களைப் புதுப்பிக்கத் தவறியுள்ளன.
இது தொடர்பில் பிரதேச செயலகங்கள் மற்றும் ஊடகங்கள் தெரிவித்த போதிலும், அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் இல்லை.
மேலும் இரண்டாம் கட்ட தீர்விற்காக 400,000 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் சுமார் 286,000 இதுவரை முறைமைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மே மாதம் தொடங்க உள்ளது. அத்துடன் அஸ்வசும நலன்புரி திட்டத்தில் 24 இலட்சம் குடும்பங்களை உள்வாங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.