24 661323d07ffd6
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பீடத்திற்கு அழைப்பு

Share

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பீடத்திற்கு அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய உள்ளக நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு, கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்காக, கட்சியின் அரசியல் பீடத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க(Chandrika Kumaratunga) தலைமையில் இன்று(08.04.2024) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்தது.

இருந்தபோதிலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்க விரும்புவதாக சிறிசேன பதிலளித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இருந்து பல ‘முக்கியமான’ கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால, மருதானை பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகள் காரணமாக, கொழும்பு 10, டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் பிரவேசிப்பது சகலருக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்றைய அரசியல்பீடக் கூட்டம் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா தவிர்ந்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...