24 660b988b7355a
இந்தியாஇலங்கைசெய்திகள்

மோடி விடயத்தில் ஸ்டாலினின் இரட்டை வேடம் அம்பலம்

Share

மோடி விடயத்தில் ஸ்டாலினின் இரட்டை வேடம் அம்பலம்

பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) விவகாரத்தில் திமுகவின்(DMK) இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்(Jaishankar) கச்சதீவு(Kachchatheevu) விவகாரம் தொடர்பில் விமர்சித்துள்ளார்.

தமிழக முதல்வர்.ஸ்டாலினுக்கு(M. K. Stalin) நான் 21 முறை கச்சதீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன் என்றும் இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல.” எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கச்சதீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலுக்கு அமைய கச்சதீவு விவகாரம் இந்திய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“கச்சதீவு பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்வது முக்கியம். இந்த பிரச்சினை நீண்ட காலமாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்கள் உரிமை குறித்து நாடாளுமன்றத்தில் 1974ஆம் ஆண்டு விளக்கம் தரப்பட்டுள்ளது.

மேலும் அப்போது கைச்சாத்திடப்பட்ட இந்தியா – இலங்கை ஒப்பந்தப்படி கச்சதீவில் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.

இந்த ஒப்பந்தத்தின்போது முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங் 1974ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் “பாக் ஜலசந்தியில் கடல் எல்லையை வரையறுக்கும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் நியாயமானதாகவும் சமமானதாகவும் கருதப்படும் என்று நான் நம்புகிறேன்.

அதேவேளை இந்த ஒப்பந்தத்தின் மூலம் கடந்த காலங்களில் இரு தரப்பினரும் அனுபவித்து வந்த கடற்றொழில் புனித யாத்திரை மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் உரிமைகள் எதிர்காலத்துக்காக முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன’” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இப்படி தெரிவித்த இரண்டே ஆண்டுகளில் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டன. இந்திய கடற்றொழிலாளர்கள் கச்சதீவு கடல் பகுதியில் தொழில் செய்ய தடை செய்தனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கச்சதீவு இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டதுடன் ‘இலங்கையின் இந்த பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் இந்தியாவின் கடற்றொழில் கப்பல்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் தொழில் செய்யக்கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் விளைவு கடந்த 20 ஆண்டுகளில் 184 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 175 இந்திய படகுகள் இலங்கையர்களால் இந்த 20 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கச்சதீவு விவகாரம் கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. உண்மையில் தமிழக முதல்வர் எனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை கச்சதீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன். இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல. பல ஆண்டுகளாக உள்ள இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நேரடி பிரச்சினை.

கச்சதீவு தாரைவார்க்கப்பட்டபோது மாநில அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று திமுக கூறுவதை ஏற்க முடியாது.

இந்தியாவின் நிலப்பரப்பில் அப்போதைய மத்திய அரசும் பிரதமர்களும் காட்டிய அலட்சியமே இது மாதிரியான பிரச்சினைகள் தொடர்ந்து எழக் காரணம்.

முன்னாள் பிரதமர்கள் யாரும் கச்சதீவு பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை.

மே 1961ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு “இந்தச் சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை அதன் மீதான எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

இது போன்ற விடயங்கள் காலவரையின்றி நிலுவையில் இருப்பதும் மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதும் எனக்குப் பிடிக்கவில்லை.” என்று ஒரு முறை கூறியுள்ளார்.

இதிலிருந்து நேரு இந்த தீவை ஒரு தொல்லையாகப் பார்த்தார் என்பது தெளிவாகிறது. மேலும் இந்த தீவை எவ்வளவு சீக்கிரம் தாரை வார்க்க முடியமா அவ்வளவு நல்லது என்பதே நேருவின் பார்வையாக இருந்துள்ளது.

இந்த பார்வை இந்திரா காந்திக்கும் தொடர்ந்தது. பிரதமராக இருந்தபோது இந்திரா காந்தி கச்சதீவை ஒரு சிறிய பாறை என்று அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த புறக்கணிப்பு மனப்பான்மையே கச்சத்தீவு தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கான காங்கிரஸின் தற்போதைய அணுகுமுறையாகும்” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...