24 660a1d155a5f5
இலங்கைசெய்திகள்

நாமலை கைவிட்ட தென்னிலங்கை அரசியல்வாதிகள் – அதிர்ச்சியில் ராஜபக்ச குடும்பம்

Share

நாமலை கைவிட்ட தென்னிலங்கை அரசியல்வாதிகள் – அதிர்ச்சியில் ராஜபக்ச குடும்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (Sri Lanka Podujana Peramuna) கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) நியமிக்கப்பட்டமை கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தங்காலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தை இறுதி நேரத்தில் புறக்கணித்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

மகிந்தவின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) ஆகியோரும் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

கடந்த 29ஆம் திகதி இரவு, அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என ஊடகங்களுக்கு தெரிவித்தனர். முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என தெரிவித்துள்ளனர்.

அதனை பகிரங்கமாக அறிவிக்காத பொதுக் கூட்டங்களில் அவர்கள் பங்கேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) பொதுஜன பெரமுன கட்சியின் பொதுவேட்பாளராக முன்னிறுத்த முடியும் என அவர் வலியுறுத்திள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சி முழுமையாக நாமலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சிரேஷ்ட உறுப்பினர்கள் ரணிலின் பக்கம் தாவியுள்ளமை ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
17 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்வதேச விமானக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: சுற்றுலாத்துறை கடும் பாதிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை பலமடங்கு...

16 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அரசு உறுதியளித்திருந்த போதிலும், திடீரென எரிபொருள் விலைகளை அதிகரிக்க...

15 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெளிநாட்டவர்களுக்கு இலவச விசா நீடிப்பு: அமைச்சரவை அனுமதி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் வான்வெளி மூடல் காரணமாக விமானப் பயணங்கள்...

14 9
செய்திகள்அரசியல்இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஆணைக்குழு மீண்டும் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில்...