24 6608f46947b01
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Share

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில், 10 சதவீத வரியை 6 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், மார்ச் 29 ஆம் திகதி முதல் இந்த வரிக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் சீமெந்து, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் மற்றும் குழந்தைகள் பால்மா ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலை உபகரணங்கள், எழுதுபொருட்கள், ஆடைகளுக்கான மூலப்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், மோட்டார் சைக்கிள், சைக்கிள் பாகங்கள் ஆகியவற்றுக்கான வரி 10 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள், மின்சார உபகரணங்கள், குளியலறை உபகரணங்கள், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக், அலுமினியம் மற்றும் மரப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...