24 65ff5f31acf19
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு துணை யார் : பிள்ளையான் காட்டம்

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு துணை யார் : பிள்ளையான் காட்டம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன துணிந்த நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் அவர் யார் என்பதை வெளிப்படையாக விரைவாக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பிற்கு அவர் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா என்ற சந்தேகம் எங்களுக்கு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

மட்க்களப்பில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்ரர்படுகொலை இனமத நல்லிணக்க அறிதலும் புரிதலும் எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்,

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தியவர்களை தெரியும் என தெரிவித்த கருத்தை நான் ஊடகங்களில் பார்த்தேன் ஒரு சாதாரன மனிதனைபோல முன்னாள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பேசுகின்றார்.

இந்த குண்டு வெடிப்பு இடம்பெறுகின்ற போது அவர் நாட்டின் தலைவராக இருந்தார் தலைவருடைய பொறுப்பு யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் அவர் அதைவிட்டுவிட்டு இப்போது இரகசிய வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என கருத்துக்களை சொல்லுகின்றார்.

எனவே ஒருவேடிக்கையான மனிதரை இந்த நாட்டு அரசியலுக்கு கொண்டுவந்துள்ளோம் என்பதையிட்டு நாங்கள் வெட்டகப்பட வேண்டும்.

ஏன் அவர் இரகசிய வாக்குமூலம் தேவை என்கின்றார். யாருக்கு அச்சப்படுகின்றார். அப்படியென்றால் இந்த குண்டு வெடிப்பிற்கும் அவரும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு உண்டு” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...