tamilnif 29 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் நூலை வாசிக்க விரும்பாத பசில்

Share

கோட்டாபயவின் நூலை வாசிக்க விரும்பாத பசில்

கோட்டாபயவின் நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை வாசிக்க விரும்பவும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை என்னிடம் கோட்டாபயவின் நூல் இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கோட்டாபய அந்த நூலின்ஒரு பிரதியை எனக்கு வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபயவின் நூலின் டிஜிட்டல் வடிவத்தையாவது வாசித்தீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பசில் ராஜபக்ச அதுவும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப்பிரிவு அந்த நூலின் டிஜிட்டல் பிரதியை எனக்கு வழங்கவில்லை. நான் அந்த நூலை வாசிக்க விரும்பவில்லை.

அந்த நூலைப் பற்றி எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால் கோட்டாபய நூல் ஒன்றை எழுதவுள்ளார் அதற்கான விபரங்களை சேகரிக்கின்றார் என அறிந்தேன்.

நாமல் கூட புத்தகக் கடையொன்றிலேயே அந்த நூலை வாங்கியுள்ளார். கோட்டாபயவிடமிருந்து அந்த நூல் எனக்கு கிடைக்கும் என நான் நம்பவில்லை.

எங்கள் குடும்பத்தில் எந்த புரிந்துணர்வு இன்மையும் இல்லை. அவர்கள் அந்த நூலை எனக்கு வழங்காதது ஒரு பிரச்சினையில்லை.” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...