tamilni 284 scaled
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை

Share

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை

காடுகளுக்கு தீ மூட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று(13) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையை பயன்படுத்திக்கொண்டு சிலர் காடுகளுக்கு தீ மூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலாேசனை வழங்கி இருக்கிறோம்.

காடுகளுக்கு தீ வைப்பது சட்டவிராேதமான செயலாகும். அவ்வாறான சம்பவங்கள் சில கடந்த சில தினங்களாக இடம்பெற்றுள்ளமை தொடர்பில் எமக்கு அறியக்கிடைத்திருக்கிறது.

ஒரு சில இடங்களில் இது போன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் போது அதனை முப்படைகளின் உதவியுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். அத்துடன் காடுகளுக்கு தீ மூட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதேபோன்று சிலர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக தீ மூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது பாரிய விளைவுகளை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

நாட்டில தற்போது வரட்சியான காலநிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சில பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதேபோன்று விவசாய பிரதேசங்களும் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படும் அபாயம் இருந்து வருகிறது. இந்த வரட்சியான காலநிலை ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரும் எனவும் அதன் பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக காலநிலை மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு குடிநீருக்கு தட்டுப்பாடு இடம்பெறும் பிரதேசங்களுக்கு தேவையான நீரை பெற்றுக்கொடுக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம்.”என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...