இலங்கைசெய்திகள்

வெடுக்குநாறி மலைக்கு நள்ளிரவில் வழிபாட்டிற்குச் சென்ற வேலன் சுவாமிகள் கோரிக்கை

Share
tamilnaadi 80 scaled
Share

வெடுக்குநாறி மலைக்கு நள்ளிரவில் வழிபாட்டிற்குச் சென்ற வேலன் சுவாமிகள் கோரிக்கை

வெடுக்குநாறி ஆலய விவகாரமானது வலுப்பெற்று வரும் நிலையில், பாரிய போராட்டம் ஒன்றை நாளைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கவுள்ளதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வெடுக்குநாறி மலையில் இன்றைய தினம்(08) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்தே இவர் இதனை கூறியுள்ளார்.

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறும் , பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.

இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.

 

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...