திருமணம் முடிந்து வீடு திரும்பிய புதுமண தம்பதியினருக்கு விபரீதம்
கடுவெல, கொத்தலாவல பிரதேசத்தில் திருமணம் முடிந்து வீடு திரும்பிய புதுமணத் தம்பதியினர் இருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
புதுமண தம்பதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் வான் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் புதுமணத் தம்பதிகள் மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கடுவெல நகரசபைக்கு அருகில், நேற்று (1) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின் போது மணமகனும், மணமகளும் வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தம்பதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.