21 1 scaled
இலங்கைசெய்திகள்

குழந்தை கீழே விழுந்தமை தெரியாமல் சுற்றுலா பயணம் சென்ற குடும்பம்

Share

குழந்தை கீழே விழுந்தமை தெரியாமல் சுற்றுலா பயணம் சென்ற குடும்பம்

கித்துல்கல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு மாத குழந்தை ஒன்று தாய்க்கு தெரியாமல் வீதியில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் கித்துல்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த குழந்தை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் வசிக்கும் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் பிற்பகல் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.

தாயும் தந்தையும் 6 மற்றும் 3 வயதுடைய இரு பிள்ளைகள் மற்றும் ஒரு மாத குழந்தையுடன் ஒரு முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.

இதனிடையே தாயின் மடியில் இருந்த ஒரு மாத குழந்தை முச்சக்கரவண்டியில் இருந்து தவறி கீழே விழுந்தது. எவ்வாறாயினும், வீதியில் பயணித்த வேன் ஒன்றின் சாரதி, குறித்த குழந்தையைப் பார்த்து, கித்துல்கல பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சிறிது தூரம் சென்றபோது குழந்தை மாடியில் இல்லை என்பது தாய்க்கு தெரிய வந்தது.

அதற்கமைய, வீதியின் இருபுறமும் குழந்தையை தேடிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​மற்றொரு காரில் வந்த ஒருவர், குழந்தை ஒன்று வீதியில் விழுந்து கிடப்பதாகக் கூறியதையடுத்து, வேன் சாரதி ஒருவர் குழந்தையை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

பெற்றோர்கள் பொலிஸாரிடம் சென்ற போதும், உடலில் கீறல்கள் காணப்பட்டதால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழந்தையை கித்துல்கல பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் குழந்தையை கரவனெல்ல மருத்துவமனைக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் வைத்தியசாலை நிர்வாகம் குழந்தையை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்தது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...