tamilnih 49 scaled
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு

Share

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கையின் முதல் 12 நாட்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று (27) இடம்பெற்ற வேலையின்மை தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் ஏற்கனவே நிவாரண உதவிகளைப் பெற்று வருவதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ், புதிய விண்ணப்பதாரர்களுடன் 2.4 மில்லியன் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே நோக்கமாகும் என்றும் கூறியுள்ளார்.

இரண்டாம் கட்ட விண்ணப்பம் ஆரம்பிக்கப்பட்ட பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் நேற்று (27ஆம் திகதி) வரை சுமார் 30,000 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 8,750 விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் இணையம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 67af2b3d1193c
செய்திகள்உலகம்

இலங்கை தூதுவர் உட்பட 30 இராஜதந்திரிகளைத் திரும்ப அழைக்கிறது டிரம்ப் நிர்வாகம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்...

56833060 1004
செய்திகள்உலகம்

ரஷ்யாவில் கார் குண்டு வெடிப்பு: லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் உயிரிழப்பு!

ரஷ்ய ஆயுதப்படைகளின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov), கார்...

8711452 29012025vijay
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 வியூகம்: 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் தயார்!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மிகத்...

Bangladesh
செய்திகள்உலகம்

பங்களாதேஷில் மீண்டும் வன்முறை: மற்றுமொரு மாணவத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு!

பங்களாதேஷில் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்ச்சிக்குக் காரணமான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட...