மந்திரவாதி ஞானக்காவின் மாந்திரீக வலையில் பொலிஸ் மா அதிபர்
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவரது நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட ஞானக்காவினால் கட்டப்படும் சிவப்பு நூல் புதிய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் கட்டியிருப்பதனை அவதானிக்க முடிந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றுக் கொள்ளும் போது அவர் அந்த சிவப்பு நூலை அணிந்திருந்தமை மிக நன்றாக அவதானிக்கப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர் பிரித் நூலை மாத்திரம் கட்டிக்கொண்டிருந்தார். வாக்களிக்கும் போது பிரித் நூலை மட்டும் அணிந்திருந்தார்.
ஆனால் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பிரித் நூலை தூக்கி எறிந்து ஞானக்காவின் நூலை கட்டியதாக கூறப்படுகின்றது.
அதனை உறுதி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் உள்ளதென தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது.
Comments are closed.