tamilni 587 scaled
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்:சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துமாறு கோரிக்கை

Share

மத்திய வங்கிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்:சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துமாறு கோரிக்கை

மத்திய வங்கியின் பணியாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நேற்று(26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,”மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணியாளர்களின் சம்பளம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மத்திய வங்கியின் அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காகச் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமது வளர்ச்சிக்காக மக்கள் மீதே வரி சுமத்தப்படுகிறது.ஆகவே மத்திய வங்கியின் பணியாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு உடனடியாக இடைநிறுத்த வேண்டும்.

நாட்டு மக்களிடம் ஒன்றைக் குறிப்பிட்டு பிறிதொன்றை செயற்படுத்துதற்கு மத்திய வங்கி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

மத்திய வங்கியின் ஆளுநர் தான் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனையை மத்திய வங்கியின் நிதி சபைக்கு முன்வைத்துள்ளார்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தை அதிகரித்துக் கொள்ளவில்லை தமது இலாபத்தில் தான் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி குறிப்பிடுகிறது.

மத்திய வங்கி ஏனைய வணிக வங்கிகளை போல் போட்டித்தன்மையுடன் செயற்படும் நிறுவனமல்ல, கூட்டிணைந்த நிறுவனம்.நாணயம் அச்சிடல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் உரிமை மத்திய வங்கிக்கு உண்டு.

ஆகவே தமது நிதியிலிருந்து தான் சம்பளம் அதிகரிக்கப்பட்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

புதிய மத்திய வங்கி சட்டத்தின் ஊடாக மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளதால் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் தலையிட முடியாது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. இதனையே நாங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டோம்.அப்போது ஆளும் தரப்பும்,எதிர்தரப்பும் எம்மை விமர்சித்தார்கள்.

மத்திய வங்கி எவருக்கும் பொறுப்புக் கூற கடமைப்படவில்லை. இதனால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெறும்.”என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder
இலங்கைசெய்திகள்

மனதை உருக்கிய இன்றைய செம்மணியின் முக்கிய அடையாளம்!

யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதுகுழியில் இருந்து இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் சிறுவர்கள் விளையாடும்...

4
இலங்கைசெய்திகள்

தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பொருளாளர் பதவி விலகினார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை...

3
இலங்கைசெய்திகள்

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 07...

2
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி...