tamilni 557 scaled
இலங்கைசெய்திகள்

வரி இலக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்

Share

வரி இலக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்

இலங்கையர்களுக்கு வரி இலக்கம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு 16 பில்லியன் செலவில் சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட வருவாய் நிர்வாக மேலாண்மை தகவல் அமைப்பு முறைமையை முறையாக செயற்படாத காரணத்தினால் இந்த தாமதம் ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இதனை கட்டாயமாக்குவதற்கு வருவாய்த் திணைக்களம் முன்னர் திட்டமிட்டிருந்த போதிலும், தற்போதைய நிலவரத்தினால் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் வரை அது தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே இந்திய அரசின் தொழில்நுட்ப ஆதரவுடன் வரி இலக்கம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருவாய் நிர்வாக மேலாண்மை தகவல் அமைப்பு முறைமையில் ஏற்பட்டுள்ள பிழைகளினால் வரி இலக்கம் கோரி விண்ணப்பித்த 109,000 பேருக்கு வரி இலக்கங்கள் வழங்குவதில் இன்னமும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல்வரி இலக்கத்தை கட்டாயமாக்க அரசாங்கம் முதலில் திட்டமிட்டு, பின்னர் பெப்ரவரி மாதம் முதல் இருந்து அமல்படுத்த திட்டமிடப்பட்டது. எனினும், ராமிஸ் அமைப்பில் உள்ள குளறுபடிகள் காரணமாக, டின் எண் கட்டாயமாக்குவதை ஏப்ரல் வரை ஒத்திவைக்க அரசாங்கம் முடிவு செய்தது.

இதற்கிடையில், வருவாய் நிர்வாக மேலாண்மை தகவல் அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, அமைப்பிற்கு வெளியே மற்றொரு மென்பொருள் அமைப்பை நிறுவி, வரி இலக்கத்தை விரைவாக வழங்குவதற்கான திட்டத்தை தயாரிக்க இந்திய அரசின் தொழில்நுட்ப ஆதரவில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நோக்கத்திற்காக இந்திய அரசாாங்கமும் தனது ஆதரவை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அதிக செலவின்றி மென்பொருள் அமைப்பை தயாரிப்பது தொடர்பாக இந்த நாட்களில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

வரி நிர்வாகத்தை மேலும் திறம்படச் செய்யும் வகையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வருவாய் நிர்வாக மேலாண்மை தகவல் அமைப்ப முறையை அறிமுகப்படுத்தியது.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...