இலங்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளது
ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளது
ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு பொதுமக்கள் மத்தியில் பாரியளவில் குறைந்துள்ளதாக மல்வத்துபீட மகாநாயக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வனிதா பிரிவின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று நேற்று(22) கண்டியில் மல்வத்துபீட மகாநாயக்கர், திப்பட்டுவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசிபெற சென்றிருந்தனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் கருத்து வெயியிட்ட மகாநாயக்கர், ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு பொதுமக்கள் மத்தியில் பாரியளவில் குறைந்துள்ளது. கண்டியிலும் அக்கட்சிக்கு முன்னர் இருந்த செல்வாக்கு தற்போதைக்கு இல்லை.
அவ்வாறான பின்புலத்தில் தேர்தல்கள் திட்டமிட்ட வகையில் நடக்குமா என்பதும் சந்தேகம் தான். எனினும் தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்தல்களை நடத்துதில்லை என தீர்மானித்தால் அதனை ஆமோதிக்கக் கூடாது.
எதிர்ப்புகளை வௌிக்காட்ட வேண்டும். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் ஒவ்வொருவரும் பொருத்தமான மாத வருமானத்தைப் பெற வழியேற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.