இலங்கைசெய்திகள்

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்! நாடு திரும்பினார் பசில்

Share
tamilni 202 scaled
Share

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்! நாடு திரும்பினார் பசில்

அமெரிக்காவில் உள்ள பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச அடுத்த வாரம் மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலை முன்னிட்டு சில முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அவர் இலங்கைக்கு திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச இலங்கைக்கு திரும்பியதை தொடர்ந்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த அதிபர்த் தேர்தலின் போது, இறுதித் தறுவாயில் தனது கட்சி வேட்பாளரை அறிவித்ததாக அவர் நினைவூட்டியுள்ளார்.

அத்துடன், தனது கட்சி கடந்த காலங்களில் பல சிக்கல்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கியிருந்தாலும், தற்போது நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான பலம் இருப்பதாக எஸ்.எம். சந்திரசேன கூறியுள்ளார்.

இலங்கையில் அதிபர்த் தேர்தல் நடைபெற மேலும் சில மாதங்கள் இருந்தாலும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை மேற்கொள்ள கட்சி மேலும் தாமதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
2 12
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன....

2 9
இலங்கைசெய்திகள்

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில்..

கொடபொல பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – கொடபொல பிரதேச...

2 10
இலங்கைசெய்திகள்

புத்தளம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்…

புத்தளம் – வென்னப்புவ பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் –...

2 8
இலங்கைசெய்திகள்

அம்பாந்தோட்டையில் முன்னிலையில் உள்ள அநுர தரப்பு..

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்...