கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலத்திரனியல் கட்டமைப்பு ஒன்று பொருத்தப்பட்ட பாதணியுடன் வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடு செல்வதற்காக வந்த பயணி ஒருவர் நேற்று (9.2.2024) இரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் விமான நிலைய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.