விபத்துக்களால் யாழ்.போதனா வைத்தியசாலையில் பதிவான உயிரிழப்புகள்
கடந்த 2023ஆம் ஆண்டு, விபத்துக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று(09.02.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கடந்த 2023 ஆம் ஆண்டு விபத்துக்களில் சிக்கிய நிலையில் ஆயிரத்து 559 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
எனினும் அவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்“ என தெரிவித்துள்ளார்.