இலங்கை
ரணிலுடன் கைகோர்க்க தயாராகும் சஜித் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
ரணிலுடன் கைகோர்க்க தயாராகும் சஜித் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக ஆளுங்கட்சிக்குத் தாவப் போகின்றாரா என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் தொற்றிக் கொண்டுள்ளது.
கயந்த கருணாதிலக்க ஜனாதிபதியுடன் இணைந்து நேற்று (5.2.2024) நடைபெற்ற “உருமய” காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
“உருமய” செயற்திட்டத்தின் தேசிய வைபவம் நேற்று (5.2.2024) பிற்பகல் ரங்கிரி தம்புலு விளையாட்டரங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
குறித்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பத்தாயிரம் காணி உறுதிகளை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கட்சித் தாவலுக்கான முன்னோடி அறிகுறியாக இந்த வைபவத்தில் அவர் கலந்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.