tamilni 44 scaled
இலங்கைசெய்திகள்

எல்லாம் கோட்டாபய தான்! நாமல் மன்றாட்டம்

Share

எல்லாம் கோட்டாபய தான்! நாமல் மன்றாட்டம்

மொட்டுக் கட்சியின் ஆட்சியில் நடைபெற்ற அனைத்துவித மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் கோட்டாபய தான் காரணம் என்று நாமல் ராஜபக்‌ச மன்றாட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ச மற்றும் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் ஆகியோர் நேற்று (03.02.2024) அநுராதபுரம் அடமஸ்தானய பிரதம தேரர் பல்லேகம ஹேமரத்ன தேரரை சந்திப்பதற்காக சென்றிருந்தனர்.

எதிர்வரும் தேர்தல்களின் போது மொட்டுக் கட்சிக்கு ஹேமரத்ன தேரரின் ஆதரவை பெற்றுக்கொள்வதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

எனினும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன பசளைத் தடை போன்ற மக்கள் விரோத தீர்மானங்கள் குறித்து ஹேமரத்ன தேரர் கடும் காட்டமான தொனியில் விமர்சித்துள்ளார்.

அதுபோன்ற தீர்மானங்கள் காரணமாக வடமத்திய மாகாண விவசாயிகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொட்டுக் கட்சியின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன பசளைத் தடை போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் அனைத்தும் கோட்டாபயவின் தனித் தீர்மானத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவற்றுக்கும் மொட்டுக் கட்சிக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று நாமல் ராஜபக்‌ச அதன்போது மன்றாட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹேமரத்ன தேரர் தொடர்ந்தும் கடுமையான தொனியில் கருத்து வெளியிட்ட நிலையில் நாமல் மற்றும் ரஞ்சித் உள்ளிட்டோர் கடும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...