இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு அருகில் மீண்டும் பயணிக்கவுள்ள காற்று சுழற்சி

tamilni 505 scaled
Share

இலங்கைக்கு அருகில் மீண்டும் பயணிக்கவுள்ள காற்று சுழற்சி

இலங்கைக்கு அருகில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி பயணிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இலங்கைக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 13, 14, அல்லது 15 ஆம் திகதியளவில் இலங்கைக்கு அருகில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சில நாட்களுக்கு பெரும்பாலும் சீரான காலநிலையே நீடிக்கும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தீவின் ஏனைய பகுதிகளில் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ. வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...