tamilnih 92 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை 46 வீதத்தால் அதிகரிப்பு

Share

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை 46 வீதத்தால் அதிகரிப்பு

ஒரு வருடத்திற்குள் அத்தியாவசிய பொருட்களின் விலை 46 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இந்த நாட்டில் பொருட்களின் விலை தொடர்பில் சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

BBC செய்தி சேவையினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மூன்று மரக்கறிகள், இரண்டு வகையான அரிசி, சீனி மற்றும் ஒரு வகை மீன் மற்றும் இரண்டு வகையான பழங்கள் அடங்கிய ஒரு பையின் விலை பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் மற்றும் வெளிச்சந்தையில் உள்ள தினசரி சில்லறை விலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உரிய கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குறித்த பொருட்கள் அடங்கிய ஒரு பையின் விலை 7176 ரூபாயாகும். இந்த ஆண்டு ஜனவரியில் அந்த பையின் விலை 10454ரூபாயாக 3278 ரூபாயில் அதிகரித்துள்ளது.

BBC அறிக்கைக்கமைய, பொருட்களின் விலை அதிகரிப்பு 46 சதவீதமாகும் என குறிப்பிடப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...