வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை குறி வைக்கும் நபர்
கண்டி மாவட்டத்தின் ஹத்தரலியத்த பகுதியில் வெளிநாட்டில் பணிபுரிந்து இலங்கை திரும்பும் பெண்களின் வீடுகளுக்குச் சென்று நிதி மோசடி செய்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகத்தர் எனக் கூறி சந்தேகநபர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பெண்களுக்கான காப்புறுதித் தொகை காலாவதியாகி விட்டதாகவும், காலாவதியான பணத்தைப் பெற்றுக் கொள்ள முதற்கட்டமாக பணம் செலுத்துமாறும் இந்த நபர் கூறியுள்ளார்.
குறித்த இதுபோன்ற பலரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.