அதிகரித்துள்ள முட்டை ஒன்றின் விலை எதிர்காலத்தில் மேலும் குறையும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில் கடந்த காலங்களில் 65 ரூபா வரையில் முட்டையின் விலை உயர்வடைந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது 50 தொடக்கம் 55 ரூபா வரையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், பல சில்லறை விற்பனை நிலையங்களில் முட்டையின் விலை 60 ரூபாவிற்கும் அதிகமான விலையிலேயே விற்பனை செய்யப்பகின்றமை குிறப்பிடத்தக்கது.
Comments are closed.