tamilni 121 scaled
இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் 10 புனிதர்களின் திருப்பண்டங்கள் அடங்கிய பேழை மீட்பு

Share

ஆசியாவில் முதன் முறையாக பத்து புனிதர்களின் உடற்பாகங்கள் உள்ள திருப்பண்டங்களை உள்ளடக்கிய புராதன பேழை ஒன்று திருகோணமலை புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தின் பங்கு குருமனையில் இருந்த இரும்பு பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்தே இவ் புனித பண்டங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என பங்கு குருவானவர் அருட்பணி எஸ்.ஆர்.ஜெயரட்ணம் தெரிவித்துள்ளார்.

கண்டெடுக்கப்பட்டுள்ள புனித பண்டங்கள் பத்து ஒரு ஆலயத்தில், ஒரே இடத்தில் கண்டறிப்பட்டுள்ளமையானது இலங்கையிலும் ஆசியா முழுவதிலும் இதுவே முதற் தடவை என அறியமுடிகின்றது.

ஒன்று அல்லது இரண்டு புனித பண்டங்கள் மட்டுமே ஆலயங்களில் இருப்பது சாதாரண நடைமுறை என்றும் ஆனால் இவ்வாறு பத்து புனித பண்டங்கள் ஒரு ஆலயத்தில் இருப்பது தாம் அறிந்தவரையில் இதுவே முதல் முறை எனவும் பங்கு குரு கூறியுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான ரோமின் வத்திகானிலிருந்து இவ் புனித பண்டங்கள் எந்த ஆண்டில் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்த வரலாற்று பதிவுகள் எதுவும் ஆலயத்தில் இல்லை எனவும் அறிய முடிகின்றது.

மெக்சிக்கோ நாட்டின் குவாடலூப்பே என்ற கிராமத்தில் புனித மரியாள காட்சி அளித்தமையை அடுத்து புனித குவாடலூப்பே அன்னை ஆலயம் திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...