திருகோணமலை – கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தானது கண்டி – திட்டவேல்மங்கட பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் பேருந்துடன் மோதிய மற்றுமொரு வேன் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தின் போது வானில் வெளிநாட்டு பயணிகள் குழுவொன்று இருந்ததாகவும், விபத்து தொடர்பான விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொன்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Comments are closed.