tamilni 86 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பலமான ஒருவரை வேட்பாளராக களமிறக்க பொதுஜன பெரமுன தீர்மானம்

Share

ஜனாதிபதி தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (04.01.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்துடன் கட்சியை கட்டியெழுப்பக்கூடிய, நாட்டின் தற்போதைய நிலைமைக்கு முகம்கொடுக்கும் பலம் கொண்ட ஒருவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நியமிக்கும்.

ஜனநாயக நாட்டில் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய தருணத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஏனைய கட்சி வெற்றி பெறும் என நினைத்து தேர்தலை ஒத்திவைத்தால் அரசியல் செய்ய முடியாது.

அரசியல் கட்சிகளுக்கு இந்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டாகும். அனைத்து முக்கிய தேர்தல்களும் இந்த ஆண்டு நடைபெறும் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் ஒரே ஒரு தேர்தலுக்கு மட்டுமே பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த பணம் இல்லை என கூறுபவர்களிடம் நாடாளுமன்றம் நடத்த பணம் உள்ளதா என கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.

நாட்டை அபிவிருத்தி செய்த அரசியல் கட்சிகள் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து உருவாக்கப்பட்டது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 68fb9443b29cd
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி...

25 68fbf3f9586ce
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசாங்க முடக்கத்தால் விமான சேவைகள் பாதிப்பு: 10 முக்கிய நகரங்களில் ஒரு மணி நேர தாமதம்!

அமெரிக்காவின் (United States) முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

l19420250910170027
செய்திகள்இலங்கை

மெட்டா மற்றும் டிக் டாக் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு: வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்க வாய்ப்பு!

ஐரோப்பிய யூனியன், மெட்டா (Meta) மற்றும் டிக் டாக் (TikTok) ஆகியவற்றின் மீது குற்றம்சாட்டடொன்றை முன்வைத்துள்ளது....

images 1 6
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் குருநகரில் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (24) போதைபொருளுடன்...