30 6
இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குள்ளாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

Share

சர்ச்சைக்குள்ளாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தப்போவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என பரீட்சை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள் வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியிலிருந்து 3 வினாக்களை நீக்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருந்தது.

எனினும் இந்த தீர்மானத்தினால், தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, பெற்றோர்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து விடைத்தாள் மதிப்பீட்டு பணியை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தீர்மானித்ததை அடுத்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்ட குழுவினால், பரீட்சைக்கு முன்னர் மூன்று கேள்விகள் மாத்திரமே வெளிவந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனித்தனியாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் மூன்று கேள்விகள் மாத்திரமே வெளியாகியிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளன.

இதற்கமைய பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணியை உடனடியாக ஆரம்பிக்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துளளது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய வீடுகளுக்கு நீர் வழங்கல் சபையின் அனுமதி கட்டாயம்: புதிய நடைமுறை விரைவில்!

இலங்கையில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் போது, வீட்டின் உட்புறக் குழாய் கட்டமைப்புகளுக்கு (Internal Plumbing) நீர்...

world 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூரியன் நாளை நேர் உச்சியில்: பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலைக்கு மத்தியில், நாட்டின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 07, 2026)...

world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...