இலங்கைசெய்திகள்

5000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற ஆயத்தம்

Share
tamilni 391 scaled
Share

5000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற ஆயத்தம்

சுமார் 5000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகள் மற்றும் விசேட நிபுணத்துவ மருத்துவ பிரிவுகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சுமார் 400 மருத்துவமனைகள் மற்றும் விசேட மருத்துவ பிரிவுகள் மூடப்படக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரை சுமார் 1800 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சேவைக்கு தகுந்த சம்பளம் இன்மை, நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை, ஆரோக்கியமான தொழில் சூழ்நிலை இல்லாமை, நாட்டில் நிலவிவரும் ஸ்திரமற்ற நிலைமை போன்ற காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக சுமார் 20 மருத்துவமனைகள் 20 சிறிய மருத்துவமனைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...