கொழும்பில் பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல்!
பொரளை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்கள் இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்கள் இருவர் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் பொலிஸ் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் அனுராதபுரம் விஜயபுர பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து கூரான ஆயுதமும் தலைக்கவசமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.