tamilni 237 scaled
இலங்கைசெய்திகள்

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை உண்மைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்

Share

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை உண்மைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதை போல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிங்களப் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டமை குறித்தும் விசாரிக்க குழுக்களை நியமிக்கவேண்டும் என சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரிச்சட் சொய்சா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் படுகொலை மற்றும் சாகரிகா கோமஸ், பிரேம கீர்த்தி அல்விஸ் ஆகியோர் படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரித்தானிய ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி தொடர்பில் காட்டும் அக்கறை அண்மை காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் விவகாரத்திலும் இந்த ஆட்சியாளர்கள் செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...