tamilni 164 scaled
இலங்கைசெய்திகள்

வெட் வரி சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிடவுள்ள மைத்திரி

Share

வெட் வரி சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிடவுள்ள மைத்திரி

வெற் வரி சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட அக்கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வெற் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என அறிவிக்கின்றோம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வற் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்றைய தினம் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

எனினும், மன்றில் ஏற்பட்ட அமளி துமளி காரணமாக நேற்றைய நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த சட்டமூலங்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என சமூக ஆர்வாலர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்த பின்னணியில், ,.இன்று நாடாளுமன்றத்தில் சமர்பபிக்கப்படவுள்ள வற் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பது கட்சியின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சட்டமூலத்தக்கு எதிராக அல்லது ஆதரவாக வாக்களிப்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகள் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...