இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தகவல்

Share
tamilni 155 scaled
Share

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தகவல்

2024 வரவு செலவுத்திட்டத்துடன் பல துணை ஆவணங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச நாணய நிதிய திட்டத்தில், இலங்கையின் தற்போதைய வெளிப்படைத்தன்மை கடந்த நவம்பர் மாதம் மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக வெளியிடப்பட்ட வெரைட்டின் (Verite Research) ஆய்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ‘தெரியாதது’ என வகைப்படுத்தப்பட்ட ஆறு அர்ப்பணிப்புக்களின் முன்னேற்றம் குறித்த தகவல்களை துணை ஆவணங்கள் வழங்கியுள்ளன.

இதில் ஐந்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 6 ஆவது பொறுப்பான வரி வருவாய் இலக்கு இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

2024 நவம்பர் இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டிய 73 அர்ப்பணிப்புக்களில் 12 ‘நிறைவேற்றப்படவில்லை, 15 ‘தெரியாதவை’ மற்றும் 46 நிறைவேற்றப்பட்டுள்ளது என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி அர்ப்பணிப்புக்களில் 63 சதவீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. எனினும் இந்த வகைப்படுத்தல், இலங்கையின் ஒட்டுமொத்த செயல்திறன் ஈர்க்கக்கூடியதை விட குறைவாகவே உள்ளது என்பதையே காட்டுவதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.

இதேவேளை சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் இரண்டாம் தவணையான சுமார் 330 மில்லியன் டொலர்களை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 12ஆம் திகதி வாக்களிக்கவுள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...