tamilni 119 scaled
இலங்கைசெய்திகள்

பிரிவினைவாதத்தை தூண்டும் புலம்பெயர் அமைப்புகள்

Share

பிரிவினைவாதத்தை தூண்டும் புலம்பெயர் அமைப்புகள்

பிரிவினைவாதத்தை தூண்ட சில புலம்பெயர் அமைப்புகள் முயற்சிப்பதாக வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07.12.2023) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலம்பெயர் அமைப்புக்களிலும், சர்வதேச சமூகத்திலும் ஒரு சிலர் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறார்கள். பிரிவினைவாதத்தை தாம் ஆதரிப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறான கொள்கையுடன் எம்மால் இணங்க முடியாது.

இஸ்ரேல் – காசா போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இலங்கை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் போரை விடுத்து பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதையே முழு உலகும் வலியுறுத்துகின்றது.நாங்களும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளோம்.

தமிழ் தரப்பு பிரதிநிதிகள் பிரிவினைவாதம் பற்றி பேசுகின்றார்கள் என்று நான் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.

நான் அவ்வாறு குறிப்பிடவில்லை.’புலம்பெயர் அமைப்புக்களிலும், சர்வதேச சமூகத்தில் ஒரு சிலரும் பிரிவினைவாதத்தை தூண்டி விடுகின்றார்கள்’ என்றே குறிப்பிட்டேன்.

பொருளாதார மீட்சி தொடர்பில் அண்மையில் நாங்கள் புலம்பெயர் அமைப்புக்களுடனும்,சர்வதேச சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.அப்போது பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பெண்மணி ஒருவர் பிரிவினைவாதம் பற்றி பேசினார்.

சமஷ்டி பற்றி பேசுவது பிரச்சினையில்லை ஐக்கிய நாட்டுக்குள் ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்பது எமது நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...