இலங்கை
சர்வதேச தரப்பில் விவாதிக்கப்பட்ட இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம்
சர்வதேச தரப்பில் விவாதிக்கப்பட்ட இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம்
கடுமையாக விமர்சிக்கப்பட்ட, கொடூரமான சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மீண்டும் சர்வதேச கவனத்திற்கு உட்பட்டுள்ளதுடன் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை, அமெரிக்க காங்கிரஸ் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் முதல் மனித உரிமை ஆர்வலர்கள் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி நாட்டின் மனித உரிமைக் கடமைகளுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இலங்கை தமிழர்களின் மனித உரிமைகள் குறித்து விவாதம் இடம்பெறவுள்ளது.
இந்த ஆண்டு தமிழ் மாவீரர் தினத்தில் தமிழர்கள் நினைவேந்தலை நடத்திய வேளையில், இலங்கை அரச பாதுகாப்புப் படையினர், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் (CTID) தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டமையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று போரில் இறந்த தங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூருகின்ற நிலையில், கடந்த வாரத்தில் மாத்திரம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பான பிரித்தானிய நாடாளுமன்ற விவாதம் 2023 டிசம்பர் 5 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 2.30 – 4.00 மணி வரை (இலங்கை நேரப்படி இரவு 8.00 மணி முதல் 9.30 மணி வரை) நடைபெறவுள்ளது.
ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தலைமையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளதுடன், சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை இராணுவத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அடங்கிய விரிவான விளக்கக் குறிப்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின்போது இராணுவம் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும், அன்றிலிருந்து இலங்கையின் ஏனைய உலக நாடுகளுடனான வெளிநாட்டு உறவுகள் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் குற்றங்களை இழைத்தமை குறித்த ‘நம்பகமான குற்றச்சாட்டுகள்’ இருப்பதாக 2011 ஏப்ரலில் ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கை வெளியிட்டிருந்தது.
போரின் இறுதிக்கட்டத்தில், அப்போது ஆட்சியில் இருந்த இலங்கை அரசு, இராணுவம் மற்றும் சிவில் அரசுக்கு எதிரான பல குற்றச் சாட்டுகளை மறுத்ததுடன், தமிழ் இராணுவம் பொதுமக்களை “மனிதக் கேடயங்களாக” பயன்படுத்தியதாக வாதிட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகித்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் விடயத்தில் முன்னணி நாடாகத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்ட இலங்கை தொடர்பில் தமது வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எம்.பி.க்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளன.
வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) அடையாளம் கண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் 32 ‘மனித உரிமைகள் முன்னுரிமை நாடுகளில்’ இலங்கையும் ஒன்றாகும்.
ஜூலை 2023 இல் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றிய FCDO இன் வருடாந்த அறிக்கையானது, இலங்கையில் தமிழர்களும் சிறுபான்மை மதக் குழுக்களும் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் மற்றும் மனித உரிமைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
நடப்பாண்டின் அதன் அறிக்கையில், சிறுபான்மையினர் பல்வேறு வகையான தொடர்ச்சியான அரச அடக்குமுறைகளுக்கு உட்படுவது மட்டுமல்லாமல், அவர்களின் அடிப்படை மத உரிமைகளும் மறுக்கப்படுவது குறித்து FCDO விபரித்துள்ளது.
சிறுபான்மை சமூகங்கள் அரச அதிகாரிகளால் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதோடு, அரச அனுசரணையில் காணிகளை கையகப்படுத்துதல் அல்லது ‘நில அபகரிப்புகள்’, வடக்கு மற்றும் கிழக்கின் மக்கள்தொகை அமைப்பில் அவர்களின் தாக்கம் மற்றும் பௌத்தம் அல்லாத பிரிவினரின் மத சுதந்திரத்தின் மீதான அவர்களின் தாக்கம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இலங்கையின் ஆயுத மோதலில் உயிரிழந்தவர்களுக்கான தமிழர் நினைவேந்தல்களை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சீர்குலைத்து வருகின்றனர்.
மேலும் தமிழர்கள் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகளை பேணுவதாக தன்னிச்சையாக குற்றம் சாட்டப்படுகிறார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.
டிசம்பரில் ஜனாதிபதி விக்ரமசிங்க தமிழ் கட்சிகளுடன் அரசியல் தீர்வை எட்டுவதாக உறுதியளித்தார். எட்டு புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தடையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன, ஆனால் சில முஸ்லிம் பொதுநல அமைப்புகள் மற்றும் கவிஞர் அஹ்னாப் ஜசீம் உள்ளிட்ட தனிநபர்கள் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு செய்தி அறிக்கைகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் அடங்கிய ஆவணம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரமான தன்மை மற்றும் அதன் கொடூரமான துஷ்பிரயோகம் பற்றி விவாதிக்கிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் (PTA) திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் முஸ்லிம் மற்றும் தமிழ் சிறுபான்மையினர் தொடர்ந்தும் அநியாயமாக துன்புறுத்தப்படுகின்றனர் என சர்வதேச மன்னிப்புச் சபையின் 2023 இன் இலங்கையின் மனித உரிமைகள் மதிப்பீடு குறிப்பிடுகிறது.
2023 இல் வெளியிடப்பட்ட இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை மற்றும் 2022 நிகழ்வுகளை எதிர்நோக்கி, அந்நாட்டில் உள்ள தமிழர்கள் எவ்வாறு நிறுவன பாகுபாடுகள் குறித்து அறிக்கை செய்துள்ளனர் என்பது பற்றிய தகவல்களையும் கொண்டுள்ளது.
புகைப்படங்களின் பிரதிகள், பங்கேற்பாளர்களின் பட்டியல்கள் மற்றும் கட்டுரைகளுக்கான ஆதாரங்களின் பெயர்கள் ஆகியவற்றை கோரும் முறைமைகள் மற்றும் தமிழர் போர் நினைவேந்தல் போன்ற உணர்ச்சிகரமான நிகழ்வுகளை அறிக்கையிடாமல் விடுமாறு அச்சுறுத்துவது மற்றும் நினைவேந்தல்கள் அல்லது காணி சுவீகரிப்பு எதிர்ப்புக்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்கள் தொடர்பான எதையும் இடுகையிடும்போது, தேவையான விபரங்களுக்கு அவர்கள் ஒத்துழைக்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்துவது தொடர்பிலும், தமிழ் ஊடகவியலாளர்களை இராணுவம் எவ்வாறு கண்காணிக்கிறது என்பதை அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கை விபரிக்கிறது.
உள்ளூர் மற்றும் இந்திய வம்சாவளி தமிழர்கள் பல்கலைக்கழக கல்வி, அரச வேலைகள், வீட்டுவசதி, சுகாதாரம், மொழி சட்டங்கள் உள்ளிட்ட விடயங்களில் நீண்டகால, முறையான பாகுபாட்டிற்கு உட்பட்டுள்ளனர்” என அமெரிக்க அறிக்கை மேலும் கூறியுள்ளது.
கனடா மற்றும் சுவிட்சர்லாந்தின் தூதரகங்களின் தலைவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளப் பெற்று மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.