அரசியல்இலங்கைசெய்திகள்

சஜித்துக்கு எதிராக நடவடிக்கை : பிரதமர் வலியுறுத்து

rtjy 6 scaled
Share

சஜித்துக்கு எதிராக நடவடிக்கை : பிரதமர் வலியுறுத்து

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் நிலையியற் கட்டளை சட்டம் தொடர்பில் கேள்விகளை எழுப்பும்போது அதனை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என பிரதமர் தினேஷ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் இது குறித்து சபாநாயகர் உரிய தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (01.12.2023) எதிர்க்கட்சித் தலைவர் நிலையியற் கட்டளை சட்டம் தொடர்பில் கேள்விகளை எழுப்பிய போது குறித்த கேள்விக்கு மேலதிகமாக மேலும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதன் போது “எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய எந்த கேள்விக்கு பதில் கூற வேண்டும்?” என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர சபாநாயகரிடம் வினவினார்.

இந்நிலையில், சபையில் ஏற்பட்ட சர்ச்சையின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன் போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

“நிலையியற் கட்டளை சட்டம் தொடர்பில்(27/2) கேள்விகளை எழுப்பும் போது அதற்கு மேலதிகமான கேள்வியையும் எழுப்ப முடியுமா?

அது தொடர்பில் உத்தரவொன்றை சபாநாயகர் பிறப்பிக்க வேண்டும், நாளை முதல் அது நடைமுறைக்கு வர வேண்டும்.

சபாநாயகருக்கோ அல்லது எதிர்க்கட்சித் தலைவருக்கோ தேவையான விதத்தில் நிலையியற் கட்டளையை துஸ்பிரயோகம் செய்ய முடியுமானாலும் ஆளும் கட்சி அவ்வாறு செயற்படாது.

நாடாளுமன்றத்திலிருந்து விலகிச் செல்லும் தினத்திலும் குறித்த நிலையியற் கட்டளை எதிர்காலத்திற்காக பாதுகாத்து வழங்கப்பட வேண்டும்.” என்றார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...