பிரதமர் மீது பகிரங்க குற்றச்சாட்டு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என பிரதமரின் பெயரை கூறி பணம் பறிக்கும் குழு செயற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,டென்மார்க்கில் வேலை வாங்கி தருவதாக சொல்லி இந்த நாட்டு இளைஞர்களிடம் தலா 6 லட்சம் ரூபாய் வசூலிக்கும் செயற்பாட்டில் பிரதமரின் ஒருங்கிணைப்பு அதிகாரி என்று கூறிக் கொள்ளும் ஒரு குறிப்பிட்ட நபரும் குழுவும் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து முறையான விசாரணை வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன,“இந்த கேள்வியை எதிர்க்கட்சி தலைவர் கேட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவத்தில் நான் ஒருபோதும் ஈடுபடவில்லை. மேலும் எனது நிறுவனம் இதில் ஈடுபடவில்லை.
இந்த விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நம் நாட்டில் பல்வேறு நபர்களின் பெயர்களை வைத்து இவ்வாறு கடத்தல் நடக்கிறது. இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.”என கூறியுள்ளார்.