இலங்கைசெய்திகள்

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க காத்திருந்த தாய்க்கு சோகம்

tamilni 244 scaled
Share

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க காத்திருந்த தாய்க்கு சோகம்

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும், பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

மூதூர் இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத இளம் கற்பிணித்தாயொருவர் (16.11.2023) மாதாந்த மகப்பேற்று பரிசோதனைக்காக திருகோணமலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.

இதன்பின் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்ததுடன் அவரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த தாய் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டபோதிலும் வழியில் உயர் குருதி அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்துள்ளார்.

பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டபோதிலும் குறித்த தாயும் உயிரிழந்ததுடன் ஒரு குழந்தை மட்டும் காப்பாற்றப்பட்டு விசேட சிசு பராமரிப்புப்பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாயின் மரணத்திற்கான முழுமையான காரணம் தற்போது தெரியவராத நிலையில் உயர் குருதி அழுத்தம் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

தாய் மற்றும் சிசுவின் சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
19 7
உலகம்செய்திகள்

கனடா பிரதமரை கூப்பிட்டுவைத்து அவமதித்த ட்ரம்ப்: கார்னியின் பதிலடி

தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை அவரது அலுவலகத்தில் சந்தித்தார் கனடா...

20 8
உலகம்செய்திகள்

இந்தியா பின்வாங்கினால் நாங்களும் நிறுத்த தயார்! பாகிஸ்தான் அறிவிப்பு

இந்திய இராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் பதற்றத்தை குறைக்க தயாராக இருக்கிறோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது....

16 8
உலகம்செய்திகள்

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! விஜய் பெருமிதம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களை...

18 7
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூரில் Jem தலைவர் மசூத் அசார் கொல்லப்பட்டாரா?

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் Jem பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 9 பேர்...